கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த நடிகர் சாய் தீனா

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் ஊராட்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகம்,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 38க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கு பெற்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்றது.
இதில் இறுதியாக பாண்டிச்சேரி அணி வெற்றி பெற்று கோப்பையும், பரிசுத்தொகையும் பெற்றனர்.
இதில் திரைப்பட நடிகர் சாய் தீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களிடம் கைப்பந்தை வீசி போட்டியை தொடங்கி வைத்து அவர்களுடன் விளையாடினார்.
மேலும் முன்னாள் அமைச்சர் சரோஜாவும் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பகல், இரவு ஆட்டங்களாக மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)