அமெரிக்காவின் புதிய அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை – கமலா ஹாரிஸ் தகவல்
தமது அமைச்சரவையில் குடியரசுத் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் அளிக்கப்படும் என துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்ஜியாவில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதி பணியாற்றுவேன் என அவர் உறுதி அளித்தார்.
அமைச்சரவையில் குடியரசுத் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தால், அது மக்களுக்கு நன்மை அளிப்பதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாற்றுப் பார்வையும் வெவ்வேறு அனுபவங்களையும் கொண்ட ஒருவர் உடன் இருப்பது மிகவும் முக்கியம் எனக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)