இலங்கையில் நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் படை வீரர்களை திரும்பப் பெற நடவடிக்கை!
நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களை மீளப்பெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நாட்டில் நெடுஞ்சாலை அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அந்தக் காலப்பகுதியில், தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விலை மதிப்புமிக்க பாதுகாப்பை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





