இலங்கை – கொழும்பில் பாதுகாப்பற்ற மரங்களை அகற்ற நடவடிக்கை!
கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற மரங்ககளை எதிர்காலத்தில் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை தாவரவியல் பூங்கா மற்றும் கிளை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் சுமார் 200 மரங்களின் கிளைகளை சமப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.
அண்மையில் கொழும்பில் மரமொன்று பேருந்து ஒன்றின் மீது விழுந்த நிலையில், பாரிய விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)