இலங்கை

நெற்செய்கைக்கு இணையான விலையில் கிடைக்கும் உரத்தை மரக்கறி செய்வோருக்கும் வழங்க நடவடிக்கை!

நெற்செய்கைக்கு யூரியா உரத்திற்கு இணையான விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை   மரக்கறி விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலையங்களின் முகாமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு கருத்து தெரிவித்த விவசாய பிரதிநிதிகள், தொடரும் வறட்சி மற்றும் உர விலை உயர்வால் மரக்கறி விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நெல் பயிர்ச்செய்கைக்கு யூரியா உரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் மரக்கறி பயிரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, அடுத்த பருவத்தில் இருந்து நெற்செய்கைக்கான யூரியா உரத்துக்கு நிகரான விலையில் மரக்கறி விவசாயிகளுக்கும் யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை உரக் கூட்டுத்தாபனம் மற்றும் வர்த்தக உர நிறுவனம் ஆகியன மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு கலப்பு உரங்களை தயாரித்து சந்தை விலையை விட குறைந்த விலையில் இந்த உரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!