இலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை!
இந்த நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் தின நிகழ்வில் இன்று (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மற்றும் பாலின மசோதா ஆகிய இரண்டும் முக்கியமான மசோதாக்கள் எனத் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச கருப்பொருள் “பெண்களில் முதலீடு செய்யுங்கள் – முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” என்பதாகும்.
(Visited 6 times, 1 visits today)