இலங்கை : பொதுத் தேர்தலை தொடர்ந்து உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை!
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை நடத்துவதற்கான திகதியை விரைவில் நிர்ணயம் செய்யும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வது முன்னுரிமையான பணியாக கருதப்படுவதால், பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.





