இலங்கை

களுத்துறையில் கெஹலியவிற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (18.08) மக்கள் கையொப்ப சேகரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி  களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி.பெரேரா இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

முறையான சுகாதார சேவையை ஏற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து, தற்போதைய சுகாதார சேவையில் இருந்தும் தற்போதைய சுகாதார அமைச்சரையும் இராஜினாமா செய்து பொருத்தமான ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் இருந்து மருந்து பெற வந்த நோயாளர்களும், பிரதான வீதியில் பயணித்தவர்களும் இந்த கையெழுத்துப் பத்திரத்தில் கையொப்பமிடுவதைக் காணமுடிந்ததாக இன்றைய தெரண செய்தியாளர் தெரிவித்தார்

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்