சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி நிலையங்கள் அனைத்தையும் மூட நடவடிக்கை
சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று குறித்த பரிந்துரைகளில் சுகாதார அமைச்சு சில மாற்றங்களைச் செய்துள்ளது.
அதற்கமைய, திங்கட்கிழமை முதல், மேம்படுத்தப்பட்ட JN.1 ரக Pfizer-BioNTech/Comirnaty தடுப்புமருந்துகளும் JN.1 ரக Moderna/Spikevax தடுப்புமருந்துகளும் மக்களுக்கு வழங்கப்படும்.
கோவிட்-19 தொற்றுக்கு எதிராக இன்னும் சிறந்த பாதுகாப்பை அவை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசித் திட்டத்திற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
JTVC எனும் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் தற்போது 5 மட்டுமே இயங்குகின்றன. டிம்பர் மாதம் முதல் அவை மூடப்படும்.
சுமார் 500 தனியார் மருந்தகங்களிலும் 10 பலதுறை மருந்தகங்களிலும் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் கோவிட்-19 தடுப்பூசியை ஒரு முறை போட்டுக்கொண்டால் போதும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.