இலங்கை

கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வாரமும் எதிர்வரும் வாரமும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய மட்டத்திலும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்திலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாட்டில் கடந்த 3 வாரங்களில் 7069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46473 ஆக உயர்வடைந்துள்ளது. 6 மாவட்டங்களின் 67 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி, குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த டெங்கு அபாய நிலைமை காணப்படுகின்றது.

இதனிடையே, அடுத்த மாதம் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் நிலைமை காணப்படுவதன் காரணமாக டெங்கு அபாயம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!