தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில் தகாத இணையதள முகவரி அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு, தனது விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடத் தொகுதியில், வெளியார் சதி மூலம் இத்தளம் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து குறித்த பாடத் தொகுதிகளின் விநியோகம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது ஒரு இறுதி செய்யப்பட்ட பதிப்பு அல்ல என கல்வி அமைச்சுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.





