லண்டனில் விலங்குத் தோல் பயன்பாட்டிற்கு தடை விதிக்க நடவடிக்கை
லண்டனில் கவர்ச்சியான விலங்குகளின் தோல்களைக் கொண்டு செய்யப்படும் ஆடைகளைக் காட்சிக்கு வைக்கப்போவதில்லை என பிரித்தானிய Fashion மன்றம் அதனை அறிவித்தது.
லண்டன், பாரிஸ், நியூ யார்க், மிலான் ஆகிய நான்கு இடங்களில் பெரிய Fashion வாரம் நடக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனைப் பின்பற்றி மற்ற நகரங்களும் விலங்குத் தோலுக்குத் தடை சொல்லுமா என்பது தெரியவில்லை.
விலங்குகளின் ரோமமும் தோலும் கொண்ட ஆடைகள் இல்லை என்ற நிபந்தனையை ஒப்புக்கொண்டால்தான் வடிவமைப்பாளர்கள் லண்டன் Fashion நிகழ்ச்சியில் பங்குபெறலாம்.
2018 முதல் லண்டன் Fashion வாரத்தில் விலங்குகளின் ரோமம் இல்லை. ஆனால் பாம்பு, முதலை ஆகிய விலங்குகளின் தோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அடுத்து இறகுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது பற்றிப் பரிசீலிக்க விருப்பதாய் மன்றம் கூறியது.