இலங்கையில் பாட புத்தகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட “ஒர்க்புக்ஸ்” தவிர மற்ற பாடப்புத்தகங்களை பள்ளிக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு நடவடிக்கையாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(Visited 10 times, 1 visits today)