பிரான்ஸில் கைது செய்யப்பட்ட Telegram நிறுவனர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்Telegram செயலியைத் தோற்றுவித்த பேவல் டூரோவின் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு பிரெஞ்சு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
39 வயது செல்வந்தர் டூரோவின் Telegram தளங்களில் குற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வார இறுதியில் கைதுசெய்யப்பட்ட அவர், 4 நாட்கள் வரை விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்படக்கூடும். விசாரணையின் முடிவில் டூரோவ் விடுதலை செய்யப்படலாம் அல்லது அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம்.
இதற்கிடையே, பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் டூரோவ் கைது செய்யப்பட்டதில் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.
டூரோவ் விவகாரத்தின் முடிவு, நீதிபதிகளின் கையில் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)