ஜெர்மனியில் குறைந்த ஊதியம் பெறும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஜெர்மனியில் பெண்கள் குறைந்தளவு ஓய்வூதியத்தை பெறுகின்ற காரணத்தினால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கமானது பெண்களுக்கான அடிப்படை ஓய்வூதியம் ஒன்றை அறிமுகம்படுத்தியுள்ளது.
ஜெர்மன் அரசாங்கமானது 2025 ஆம் ஆண்டுக்குரிய தனது வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுதலில் பாரிய சிக்கலில் சிக்கியுள்ள காரணத்தினால் தற்பொழுது கூடுதலான பணத்தை சேகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் பெண்களுக்கான கூடுதலாக வழங்கப்படுகின்ற பணத்தை நிறுத்த கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் அவர்கள் பெண்களுக்காக கூடுதலாக வழங்கப்பட்ட மாதாந்தம் கொடுப்பனவான 107 யுரோக்களை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அரசாங்கமானது பெண்களுக்கான மேலதிக ஓய்வு ஊதியத்துக்காக வருடாந்தம் 14 பில்லியன் யுரோக்களை செலவீடு செய்வதாகவும், இந்த மேலதிக ஓய்வு ஊதிய பணத்தை இடை நிறுத்தினால் 90 லட்ச பெண்கள் பாதிக்கபட நேரிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதனால் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன் அரசாங்கமானது பல ஆய்வுகளை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.