ஜெர்மனியில் உதவி பெறும் மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
ஜெர்மனியில் பாடசாலை மற்றும் பல்கலைகழக மாணவர்கள் அதிகளவில் தமக்கான உதவியை அரசாங்கத்தில் இருந்து பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மற்றும் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிதியத்தை பெறுகின்றவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு 635600 பேர் இவ்வாறு அரசாங்கத்தினுடைய நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக புள்ளி விபரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 0.9 சதவீதமான அதிகரிப்பாக காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கும், 2021 ஆம் ஆண்டுக்கும் இடையில் வருடம் ஒன்றுக்கு தலா 501 400 பேர் இவ்வகையாக அரசாங்கத்திடம் நிதி உதவியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு 3.4 மில்லியன் யூரோக்களை இவ்வாறு பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிதியத்துக்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினுடைய நிதியத்தை பெறுகின்றவர்களில் 58 சதவீதமானவர்கள் பெண்கள் என்றும், 42 சதவீதமானவர்கள் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 55 சதவீதமானவர்கள் முற்று முழுதான உதவியை பெற்றுள்ளார்கள் என்றும் குறித்த அமைப்பானது தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியத்தில் 3.4 மில்லியன் யுரோக்களில் 2.9 மில்லியன் யுரோக்கள் பல்கலைகழக மாணவர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிகுதி 526 மில்லியன் யுரோக்கள் பாடசாலை மாணவர்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.