இலங்கை பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கை பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாக்கும் வகையில் வலுவாகக் கட்டமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
(Visited 50 times, 1 visits today)