விவசாயத்தை காக்க பிலிப்பைன்ஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை அந்நாட்டு அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.
அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளார்.
1986 இல், மக்கள் எழுச்சியில் மார்கோஸின் தந்தை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16%, சுமார் 50 லட்சம் ஹெக்டேர் நிலம், கிட்டத்தட்ட 30 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 10 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் மறுபகிர்வு செய்யப்பட்டதால் அரசாங்கத்திற்கு பணம் செலுத்தப்படாததாலும், நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பண்ணை துறையின் பங்களிப்பு சுருங்கி வருவதாலும் பிலிப்பைன்ஸ் பாராளுமன்றம் இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, 1988ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், 30 ஆண்டு நிலுவைத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.
இப்போது ஃபெர்டினாண்ட் மார்கோஸ் கையெழுத்திட்ட “புதிய விவசாய விடுதலைச் சட்டம்” விவசாயிகளின் சொத்துக்கள் தொடர்பான அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளது.