இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம் – ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுனர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் எந்தவொரு மத்திய வங்கி ஆளுனர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாதென குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபை தலைவர் மற்றும் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அரச அதிகாரத்துடன் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய கடந்த செப்டம்பர் 11ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கி ஆளுனர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிந்து அதனை நடைமுறைப்படுத்த அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதனூடாக மத்திய வங்கி ஆளுனர்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் நூற்றுக்கு 74 வீதத்த்தை ஒத்த மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவு அவர்களின் சேவைக் காலத்தை கவனத்திற் கொள்ளாது வழங்கப்பட்டது.

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முன்னர் இருந்த, தற்போது இருக்கும் அல்லது எதிர்காலத்தில் நியமிக்கப்படும் எந்தவொரு மத்திய வங்கி ஆளுனர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறமாட்டாது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்