சிங்கப்பூரில் அதிரடி நடவடிக்கை – 80,000 தொலைபேசி எண்களுக்கு தடை!
சிங்கப்பூரில் ScamShield செயலி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, சுமார் 80,000 தொலைபேசி எண்களை தடை செய்துள்ளது.
அத்துடன் அந்த எண்களை, தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது. அத்துடன் சுமார் 5 மில்லியன் குறுஞ்செய்திகளை மோசடித் தகவல் என செயலி அடையாளம் கண்டுள்ளது.
ScamShield செயலி சென்ற மாத நிலவரப்படி 750,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. செயலியில் மேம்பாடுகள் செய்யப்படுகின்றது.
நச்சு நிரல்களை அடையாளம் காணும் மற்ற செயலிகளுக்கு ScamShield ஆதரவாகச் செயல்படுகிறது.
நச்சு நிரல்களை அடையாளம் காணவோ தடுக்கவோ ScamShield செயலியால் இயலாது.
ஆனால் அது போலிக் குறுஞ்செய்திகள், அழைப்புகள் ஆகியவற்றைத் தடுத்து, மோசடிச் சம்பவங்களுக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. புதிய தொடர்புக் கருவிகளின் விற்பனைக்கு முன்பாகவே அவற்றில் ScamShield செயலியைப் பதிவிறக்கம் செய்யும் சாத்தியம் குறித்து மன்றத்தில் கேட்கப்பட்டது.
எல்லா வாடிக்கையாளர்களும் அதற்கு இணங்குவார்கள் என்று கூறமுடியாதென தெரிவிக்கப்படுகின்றது.