மும்பை இந்தியன்ஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலகுவார் என பரவலாக கருத்துக்கள் பரவி வந்தன.
ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கு பெற்றால் அவரை வாங்குவதற்கு சில ஐபிஎல் அணிகள் 50 கோடி வரை செலவு செய்ய தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்கும் என்ற அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவின் காலம் முடிந்துவிட்டதாக கருதியது.
இனி இளம் கேப்டன் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நினைத்தது.
அதன் காரணமாகவே, ஹர்திக் பாண்டியாவை அந்த அணி கேப்டன் ஆக நியமித்தது.
ஆனால், ஹர்திக் பாண்டியாவால் அனுபவ வீரர்கள் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியை சரியாக வழிநடத்திச் செல்ல முடியவில்லை
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றின் முடிவில் கடைசி இடத்தை மட்டுமே பெற்றது.
அதே சமயம், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ரோஹித் சர்மா இந்திய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக வழி நடத்தினார்.
அத்துடன் இந்திய அணிக்கு உலகக் கோப்பையையும் வென்று கொடுத்தார்.
அப்போதே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தாங்கள் செய்த தவறை உணர்ந்து விட்டதாவும், அதனால் அவரை 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் தக்க வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்தால், அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் தான் பிரச்சனை வெடித்தது.
மீண்டும் ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோஹித் சர்மா ஆடுவாரா? என்ற கேள்வியும் உள்ளது.
எனவே, 2025 ஐபிஎல் தொடரில் யாரை கேப்டனாக நியமிப்பது? என்பதில் மட்டும் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.