காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி இந்து முன்னணியினரின் செயல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்ட பொது செயலார் அக்னி பாலா தலமையில் மேற்கத்திய கலாச்சாரம் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் நாடக காதலும், நாய்கள் காதலும் ஒன்றே என்ற அழைபிதலுடன் காதலர் தினத்துக்கு எதிரிப்பு தெரிவித்து நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் செய்து வைக்கப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னனி சார்பில் பூங்காவில் காதலர் தினத்தன்று காதல் செய்த காதல் ஜோடியினருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர்.
அதனால் இந்து முன்னனியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது அதில் இருந்து காதலர் தினத்தன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாய்களுக்கு கல்யாணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.





