2024ஆம் ஆண்டின் இலக்கு குறித்து வடகொரிய ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
3 உளவு செயற்கை கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டின் இலக்கு குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான இலக்குகணை நிர்ணயிக்கும் 5 நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் வடகொரியாவை அணுஆயுத போருக்கு தள்ளியுள்ளது.
கடுமையான போர் சூழலில் பதிலடி தரும் திறன்களை பெற பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். எதிரிகளின் எத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களையும் அடக்க முழுமையான, சரியான ராணுவ தயார் நிலையை பெற்றிருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய கிம், “2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளது. மேலும் அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.