இலங்கை: அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் பணி நீக்கம்

பொலன்னறுவை மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் எச்.எம்.ஐ.யு. கருணாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை மருத்துவமனையில் அவர் தற்போது ஆற்றி வரும் பணிகளுக்கு மேலதிகமாகவே டாக்டர் கருணாரத்னவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
இந்த நியமனம் இன்று காலை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)