ஆசியா

தைவானுக்கு உடனடி” அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு : அமெரிக்கா எச்சரிகை!

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், சீனா தைவானுக்கு “உடனடி” அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதே நேரத்தில் ஆசிய நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கவும், போரைத் தடுக்க அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா “சீனாவை ஆதிக்கம் செலுத்தவோ அல்லது கழுத்தை நெரிக்கவோ முயலவில்லை” என்றாலும், அமெரிக்கா ஆசியாவிலிருந்து வெளியேற்றப்படாது என்றும், நட்பு நாடுகளின் மிரட்டலை அனுமதிக்காது என்றும் ஹெக்ஸெத் கூறினார்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் உயர்மட்ட பாதுகாப்பு உச்சிமாநாடான ஷாங்க்ரி-லா உரையாடலில், உயர்மட்ட ஆசிய இராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றியபோது மேற்படி கூறியுள்ளார்.

சீனா பெய்ஜிங்கால் உரிமை கோரப்படும் தைவானை ஆக்கிரமித்தால் ஏற்படக்கூடிய உறுதியற்ற தன்மை குறித்து ஆசியாவில் பலர் அஞ்சுகின்றனர். சீனா பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை.

ஹெக்ஸெத்தின் தைவான் கருத்துக்களுக்கு பெய்ஜிங் இன்னும் பதிலளிக்கவில்லை.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!