இலங்கையில் பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்!

இலங்கையில் பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் புதிதாக 5000 அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)