மேற்கு ஸ்லோவாக்கியாவின் நெடுச்சாலையில் விபத்து : 37 பேர் காயம்!

மேற்கு ஸ்லோவாக்கியாவில் பேருந்தொன்றுடன் டிரக் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், 37 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து ஸ்லோவாக் தலைநகர் பிராட்டிஸ்லாவாவையும், அண்டை நாடான செக் குடியரசுடன் இணைக்கும் D2 நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சாலை சிறிது நேரத்திற்கு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
காயங்களின் தன்மை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)