இலங்கை

யாழில் விபத்து! ஒருவர் பலி – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்துள்ளார்.

விபத்தையடுத்து மீசாலை சந்தியில் நின்ற முச்சக்கரவண்டி சாரதிகள் காயமடைந்த முதியவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் 78/7c , கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 66 வயதான பத்மநாதன் கதிர்வேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!