இலங்கை செய்தி

வவுனியா புளியங்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரேடி குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!