இலங்கை

முல்லைத்தீவில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே உயிரிழந்த இரு இளைஞர்கள்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் வீதியில் நின்ற உழவியந்திரத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இது இளைஞர்கள் உழவியந்திர பெட்டியுடன் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்கள்.

விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார்கள்

உடலம் ஒட்டி சுட்டான் பொலிசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

முள்ளியவளை பொன்னகர் பகுதியினை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்

வீதியில் நெல்லினை காயப்போட்டு ஏற்றி கொண்டு நின்ற உழவியந்திரத்தின் மீது மோதி விபத்தை சந்தித்துள்ளார்கள்.

உழவியந்திரத்தின் உரிமையாளர் மற்றும் ஒருவர் ஒட்டி சுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் மேலதிக விசாரணை ஒட்டி சுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!