ஜெர்மனியில் கண்காட்சியின்போது இடம்பெற்ற விபத்து – குழந்தை உட்பட 19 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் மேற்கு நகரமான டுசெல்டார்ஃபில் உள்ள ஒரு கண்காட்சியில் வாணவேடிக்கை நிகழ்ச்சியின்னபோது இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரைன் நதிக்கரையோரத்தில் உள்ள ரைன்கிர்ம்ஸ் நிகழ்வில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு தீயணைப்புப் படை மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளன.
காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக DPA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக டுசெல்டார்ஃப் தீயணைப்பு சேவைகள் தெரிவித்தன.
10 நாள் இடம்பெறும் இந்த கண்காட்சியை காண ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)