துருக்கியில் வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்து : 12 பேர் உடல் கருகி பலி!
துருக்கியில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிகேசீரின் கரேசி மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தீயணைப்பு படை மற்றும் பிற சிறப்பு குழுக்கள் தளத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் விளைவாக உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பாலிகேசீர் கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாசவேலைகளுக்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ள அவர், ஆரம்ப கட்ட விசாரணைகள் இது விபத்து என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)