செய்தி

யுவதியின் சடலம் துஷ்பிரயோகம்: நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

மலையக பெருந்தோட்டப் பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் பிண அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டம், டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையிலேயே இக்கொடூரம் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா பகுதியை சேர்ந்த 23 வயது யுவதியொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மேற்படி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது சிற்றூழியர்கள் மூவரே, அநாகரீகமான முறையில் செயல்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்செயலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஹட்டன், நோர்வூட் உட்டப பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று மஸ்கெலியா நகரிலும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!