இலங்கையில் வெளிநாட்டு பெண்னொருவர் துஷ்பிரயோகம்!

அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 41 வயதான ரஷ்ய பெண் ஒருவர், நவம்பர் 12 ஆம் திகதி ஹோட்டல் ஊழியர் ஒருவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கி ஊழியரான பெண், சம்பவத்தன்று இரவு ஹோட்டலில் தங்கி பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்.
கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர், தனது அறைக்கு திரும்பியுள்ளார்.
இதன்போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் தனது அறைக்குள் நுழைந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அந்த பெண் அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 26 times, 1 visits today)