சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே

ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வந்த பூஜாக்கு கடைசியாக நடித்த படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.
இந்நிலையில், தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார். இது போன்று, முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே அடுத்து யார் படத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பூஜா அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, பூஜா அடுத்து நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய வெப்தொடர் ஒன்றில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.