டி20 வரலாற்றில் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா!

2025 ஆசியக் கோப்பையின் தொடக்கப் போட்டியில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற இந்தியா – ஐக்கிய அரபு அமீரக (UAE) போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம், UAE அணி 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை 7 ரன்களுக்கு வீழ்த்தினார், சிவம் துபே 3-4 என்ற சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து, இலக்கை துரத்திய இந்திய அணி, 4.3 ஓவர்களில் 60-1 என்ற ஸ்கோருடன் வெற்றியை பதிவு செய்தது, இது டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் மிக வேகமான துரத்தல் வெற்றி ஆகும். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) அடித்து, போட்டியின் நட்சத்திரமாக மாறினார்.
அதிரடி காண்பித்தது மட்டுமல்லாமல் அபிஷேக் சர்மா இந்த இன்னிங்ஸ், மூலம், T20I வரலாற்றில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால் ஒரே இந்திய வீரராக, சேஸிங் இன்னிங்ஸின் போது முதல் பந்தில் சிக்ஸ்ர் அடித்த வீரர் என்ற சாதனையை தான். நேற்று நடந்த இந்த போட்டியில் அபிஷேக் ஹைடர் அலியின் முதல் பந்தை லாங்-ஆஃப் மீது லோஃப்ட் ஷாட்டில் சிக்ஸ் அடித்து இந்த சாதனையை படைத்தார்.
இவருக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா (2021 இங்கிலாந்துக்கு எதிராக), யஷஸ்வி ஜெய்சுவால் (2024 ஜிம்பாப்வே), சஞ்சு சாம்சன் (2025 இங்கிலாந்துக்கு எதிராக) அடித்த இந்த சாதனையையில் இருந்தனர். இவர்களுக்கு பின் 4-வது வீரராக அபிஷேக் இந்த சாதனையை சேர்த்துள்ளார். அபிஷேக், 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்து, 10 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆட்டமிழந்தார்.
போட்டி முடிந்த பின், கேப்டன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மாவை பாராட்டினார். “அபிஷேக் சர்மா ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதற்கு காரணம் உண்டு. 200 துரத்தினாலும், 50 துரத்தினாலும், அவர் அணியை முன்னிலைப்படுத்துகிறார். அவரது ஆட்டம் அற்புதமானது,” என்று பாராட்டி பேசினார்.