அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் அதிரடி சோதனை: 17 பேர் கைது
அவுஸ்திரேலியாவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் நடத்திய சிறப்பு சோதனையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி 1 முதல் 14-ஆம் திகதி வரை சிட்னி, மெல்பேர்ண் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பலரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிட்னியில் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞரின் கைப்பேசியில் 100-க்கும் மேற்பட்ட AI மூலம் உருவாக்கப்பட்ட துஷ்பிரயோக வீடியோக்கள் கண்டறியப்பட்டதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து 158 குழந்தைகளை மீட்டுள்ளதாகத் தெரிவித்த படைத் தளபதி டேவிட் கோய்ல்ஸ், இத்தகைய குற்றங்களைத் தடுக்கத் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.





