இலங்கை அம்பலாங்கொடையில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு! பெற்றோரை தேடும் பொலிஸார்

அம்பலாங்கொடை, மாதம்பகம, தேவகொட பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒரு மாத வயதுடைய சிசு, தேவகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் சுவருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுவருக்கு அருகில் கைவிடப்பட்ட சிசுவை பெண்ணொருவர் கண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களுக்கும் பின்னர் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.
குழந்தையின் பெற்றோரைக் கண்டறியும் விசாரணைகளை அம்பலாங்கோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 3 visits today)