திருகோணமலையில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
திருகோணமலையின்(Trincomalee) பத்தினிபுரம் பிள்ளையார்(Pathinipuram Pillayar) கோயிலுக்கு அருகில் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய்(kandalai) பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
BKA 8820 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் இருந்து 8 கிலோ 650 கிரேம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கிருஷ்ணன் கோயில் வீதி பகுதியில் வசித்து வரும் 31 வயது உடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





