இலங்கை செய்தி

மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் பலி

கொழும்பு  புறநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு வெளிவட்ட வீதியின் 1.2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குறித்த இளைஞன் வீழ்ந்துள்ளார்.

அப்போது, ​​மாத்தறை நோக்கிச் சென்ற காருடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மெனத் பனுஜா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காரும் சேதமடைந்ததுடன், கார்  சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, பொலிசார் நடத்திய சோதனையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை