அதீத போதைப்பொருள் நுகர்வால் யாழில் இளைஞன் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில், போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பொலிசாரின் விசேட நடவடிக்கைக்கான “யுக்திய” நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலையே போதைப்பொருள் பாவனையால் குறித்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
(Visited 17 times, 1 visits today)