குழந்தை வேண்டி சாந்திய பூஜை செய்த இளம் பெண் மரணம்
கடந்த காலங்களில் கட்டுக்கதைகள் மூலம் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க முயன்ற பலருக்கு சோகமான விதியை எதிர்கொண்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
22 வயதுடைய யுவதியொருவர் பிள்ளைப்பேறு வேண்டி சாந்திய பூஜைகள் செய்த வேளையில் தனது உயிரையே விலையாகக் கொடுக்க நேரிட்டதாக தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் இருந்து இந்த செய்தி பதிவாகியுள்ளது.
அத்தனகடவல, பொலன்னறுவை, ஜம்புரேவெல பகுதியைச் சேர்ந்த 22 வயதான தில்மி சந்துனிகா, 4 வருடங்களாக குழந்தையை எதிர்பார்த்துள்ளார்.
தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகள் இருந்தும் பலவிதமான சிகிச்சை முறைகள் பலன் தரவில்லை என்றாலும் தில்மியின் கவனம் இறை நம்பிக்கையில் கவனம் திரும்பியது.
இந்த நேரத்தில், தில்மி, கிரிதலேயைச் சேர்ந்த உறவினரான பெண்ணைச் சந்திக்கிறார், சாந்திய பூஜைகள் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தை பிறப்பதாகவும் அவரால் கூறப்படுகிறது.
அதன்படி, தில்மி தனது தாயுடன் வந்து அவரிடம் இருந்து சாந்திய பூஜை செய்ய திகதி நிர்ணயம் செய்துள்ளார். ஆனால், அங்கு சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
சாந்திய பூஜைகள் தொடங்கிய முதல் நாளிலேயே தில்மிக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், மூன்றாவது நாளில் உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்தது.
அதன்படி, பொலன்னறுவை ஜயந்திபுர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
அவரது சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.