பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவர் படுகொலை!

பிரித்தானியாவின் பிராட்போர்ட் நகர மையத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறை, “அதிர்ச்சியூட்டும் சம்பவம்” பரபரப்பான பகுதியில் பகல் நேரத்தில்” நடந்ததாகவும், பலர் இதை நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளது.
தாக்குதலை நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என்றும் அவருக்கு 27 வயது இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஸ்டேசி அட்கின்சன், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)