யாழில் திருமணமாகி 20 நாட்களிலே பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்

திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (06.07.2024) இடம்பெற்றுள்ளது
தம்புவத்தை, ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சபேஸ் பிரவீனா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் வட்டவல குயில்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்தவேளை எலும்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (06) அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
(Visited 34 times, 1 visits today)