இளம்பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியுடன் விபத்தில் பலி

கேகாலை மங்கள கிராமத்தில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் குறித்த யுவதியில் செல்லப்பிராணியும் உயிர் இழந்துள்ளது.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூகவியல் பீடத்தின் மாணவி என்றும், இன்னும் சில நாட்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)