வட அமெரிக்கா

ஜோதிடம் மீதுள்ள நம்பிக்கையால் கணவன்,2 குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்த இளம்பெண்!

ஜோதிட நம்பிக்கையால் கவலையடைந்த இளம்பெண் ஒருவர், தனது கணவனை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு காரில் இருந்து இரண்டு குழந்தைகளைத் தள்ளிக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் நகரைச் சேர்ந்த இளம்பெண் டேனியல் ஜான்சன்(34). அயோகா என்ற பெயரில் இவர் ஜோதிடம் குறித்து இணையதளங்களில் எழுதி வந்தார். இந்த முழு சூரிய கிரகணம் ஆன்மிகப்போரின் சுருக்கம் என்று தன்னை பின்பற்றுபவர்களிடம் கூறி வந்தார்.

அத்துடன் இந்த சூரிய கிரகணத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் மனதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். உலகம் இப்போது தெளிவாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய நேரமிது என்று தனது எக்ஸ் தளப்பக்கத்திலும் கவலையுடன் பதிவிட்டிருந்தார்.

மரத்தில் மோதிய கார்

சூரிய கிரகணத்தால் கவலை அடைந்திருந்த டேனியல் ஜான்சன் திங்களன்று அடுக்குமாடி குடியிருப்பில் தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதன் பின் காரில் தனது இரண்டு குழந்தைகளுடன் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென தனது 9 வயது மற்றும் 8 மாதங்களேயான குழந்தைகளை காரில் இருந்து வீசிக் கொலை செய்தார். அதே வேகத்துடன் காரை ஓட்டிச் சென்று ஒரு பெரிய மரத்தில் மோதி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது கணவர், அமெரிக்காவில் விமானப்படையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிட நம்பிக்கையில் மூன்று பேரை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!