துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் தாதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச் செல்லத் தயாரான நிலையில், திடீரென விழுந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவளது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும், உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 10 times, 1 visits today)