செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு வருகைத் தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார்.

இதன்போதே அவர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மனித உரிமை ஆணைக்குழுவில், கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞனிடம் வவுனியா, வெடுக்குநாரிமலை ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி