வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டில் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞன் பஹ்ரைனிலிருந்து நேற்றைய தினம் காலை 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 30,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 150 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





