இலங்கை செய்தி

முல்லைத்தீவில் அரசபேருந்தில் மோதி விபத்துக்குள்ளான இளைஞன்

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் இ.போ.ச பேருந்துடன் மோதியே குறித்த விபத்து
இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தன்.

இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை
முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!